பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் தண்டனை வழங்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரலங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
புலதிசிபுர மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன் போது 100 நாள் திட்டத்தை நிறைவேற்று கொள்வதற்காக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதே வேளை , பொலன்னறுவ றோயல் கல்லூரியின் 50 ஆண்டு பூரத்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது புதிய தொழில் நுட்ப ஆய்வு கூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். கல்லூரியின் 50 ஆண்டு பூரத்தியை முன்னிட்டு மரம் நடும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்

0 Comments