இணையத்தை கடந்த சில நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கிறது கூகுள் ரோபோ நாய்.இணையதளம் முதல் கைப்பேசி வரை பல தொழில்நுட்பங்களில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனம், ரோபோடிக்ஸ் துறையிலும் காலடி பதித்தது.
எதிர்காலத்தில் ரோபோக்களின் பங்கு முக்கியமாக இருக்கப் போவதை உணர்ந்த கூகுள், 'போஸ்டன் டைனமிக்ஸ்' எனும் ரோபோ நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியது.
போஸ்டன் டைனமிக்சின் படைப்புகளில் ஒன்று தான் ரோபோ நாய்.
நான்கு கால்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த கடினமான பகுதிகளில் கூட நடந்து செல்லகூடிய திறன் படைத்ததாக இந்த ரோபோ நாய் உருவாக்கப்பட்டுள்ளது.
போர்க்களம் மற்றும் மீட்பு பணிகளுக்கான இடங்களில் இந்த ரோபோ நாய் அச்சமின்றி நடந்து சென்று சொன்ன வேலையை செய்யும். மேலும் கீழே விழுந்தாலும் தானாக சமாளித்து நிற்கும் தன்மை கொண்டது.
0 Comments