Ticker

6/recent/ticker-posts

என்னை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள் :விஜயகாந்த் புகார்

சமூக வலைதளங்களில் விஜயகாந்தை தொடர்ந்து சிலர் தரக்குறைவாக விமர்சிப்பதாக, சென்னை காவல்துறை ஆணையரிடம் தேமுதிக வழக்கறிஞர் அணியினர் இன்று புகார் அளித்தனர்.

அவர்கள் போலீஸிடம் அளித்த புகார் மனுவில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின்
எதிர்கட்சித் தலைவரும், லட்சக்கணக்கான தொண்டர்களின் பேரன்பிற்கு பாத்திரமானவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தும், அவரது மனம் புண்படும் வகையில் உண்மைக்குப் புறம்பாகவும், கேலிச்சித்திரங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை முகநூலிலும் (facebook), வாட்ஸ்அப்பிலும், ட்விட்டர், டெலிகிராம் மற்றும் சமூக வலைதளங்களில்(SOCIAL NETWORKING SITES), தொடர்ந்து உள்நோக்கத்துடனும், அவரது புகழை சீர்குலைக்கும் வண்ணம் குறிப்பிட்ட ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments