Ticker

6/recent/ticker-posts

டெல்லியில் இலவச WiFi அமைக்க ஒரு வருட காலம் ஆகும்: கெஜ்ரிவால்

டெல்லியில் இலவச WiFi அமைக்க ஒரு வருட காலம் ஆகும் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்றுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்அவர் மிக மும்முரமாக இருக்கிறார். முதலாக மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இவரிடமிருந்து அடுத்ததாக டெல்லியில் உள்ள அனைத்து வயதினரும் எதிர்பார்ப்பது இலவச WiFi திட்டம். இதுக்குறித்துக் கூறியுள்ள கெஜ்ரிவால், எனது மகனே இலவச WiFi உபயோகிக்க ஆவலாக உள்ளான் என்று கூறியுள்ளார்.
மேலும் இதை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன என்றும், ஆனால் அமலில் வந்து மக்கள் உபயோகிக்க ஓராண்டாவது ஆகும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

Post a Comment

0 Comments