கடந்த ஜனாதிபதி
தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைவார் என பிரபர
ஜோதிடர்கள் எதிர்வு கூறல்களை வெளியிட்டிருந்த போதிலும் சிரேஷ்ட ஜோதிடரான இந்திக்க
தொடவத்த, இத் தேர்தலில்
மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவது உறுதி என
தெரிவித்திருந்தார்.
அவ்வாறே
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஜோதிடர் இந்திக்க
தொடவத்த பிரபல்யமடைந்தார்.
இந்த நிலையில்
அண்மையில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் மேலும் பல எதிர்வுகூறல்களை
வெளியிட்டிருக்கிறார்.
இதன்படி
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு
முன்னர் கியுபாவின் முன்னாள் பிரதமரும், தற்போதைய கியுபா ஜனாதிபதியுமான ராவுல் கஸ்ரோவின் சகோதரருமான பிடெல் கஸ்ரோ
காலமாவார் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
அதேபோன்று
ஸ்ரீலங்காவில் நடைக்கவிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, இராணுவத்திலிருந்து ஸ்ரீலங்கா அரசியலில்
பிரவேசித்தவரும், கடந்த 2010ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் பொது
வேட்பாளராக களமிறங்கியவருமானவருடைய கட்சி பிளவுபடும் என்பதை கடந்த வருடம் மார்ச்
மாதம் இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் வைத்து கூறியிருந்தேன்.
அதேபோன்று 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதிக்கு முன்னர் முன்னாள் இராணுவத் தளபதி
நாட்டை விட்டு வெளியேறுவார்.
குறித்த நபர்
கடந்த 2010ஆம் ஆண்டு
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டவர் என்றும் ஜோதிடர் இந்திக்க
தொடவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

0 Comments