டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர்.
விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.

0 Comments