இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வரவிருக்கும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, மோடி சந்தித்துப் பேசுவதற்கான ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழமை அன்று இலங்கை வரும் மோடியை சந்திக்க மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக, அவர் வெள்ளியன்று கொழும்பு வரவிருப்பதாகவும் அறிய வருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, ராஜபக்ச தங்கல்லவில் உள்ள தனது பண்ணை வீட்டிலேயே முழு நேரத்தையும் கழித்து வரும் நிலையில், மோடியை சந்திக்க அவர் கொழும்பு வருவது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments