நேற்றுடன் (02.03.2015 ) கண்டி இராச்சியம் பிாித்தானியாிடம் வீழ்ச்சியுற்று 200 வருடங்கள் பூா்த்தியாகின்றன.
இதன் ஞாபகாா்த்தமாக சிங்கள இனவாத பிக்குகள் சிலா் நேற்று கண்டி தலதா மாளிகையின் மகுள் மடுவ யில் உள்ள தேசியக்கொடியை இறக்கிவிட்டு, புதிதாக வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடியொன்றை ஏற்ற முயற்சி செய்தனா்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடியில் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களைக் குறிக்கும் இரண்டு நிறங்களான மஞ்சல் நிறமும், பச்சை நிறமும் நீக்கப்பட்டிருந்தது.
பொலிஸாா் இனவாதிகளின் இந்த முயற்சியை முறியடித்தனா். ஆனால் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து, தேசியக் கொடியின் வடிவத்தை சிதைப்பது தண்டனைக்குாிய குற்றமாகும். ஆனால் பொலிஸாா் குறித்த பிக்குகள் மீது எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது அவா்களை கலைந்து செல்ல அனுமதித்தனா்.
கடந்த கால மஹிந்தவின் ஆட்சியைப் போன்று இனவாத சக்திகளுக்கு அடிபணியும் ஆட்சியாக மைத்திாியின் ஆட்சியும் அமையுமோ என்ற சந்தேகம் சிறுபான்மை சமூகங்களுக்குள் எழுந்து வருகிறது.


0 Comments