இந்தியா உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்ததில் 38 பேர் பலி ஆனார்கள். மேலும் 150 பயணிகள் காயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு நேற்று ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள பச்ரவான் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை 9.10 மணிக்கு, அந்த ரெயில் திடீரென்று விபத்துக்கு உள்ளானது.
ரெயில் நிலையத்தை நெருங்கும்போது ரெயில் என்ஜினும், அதை அடுத்துள்ள 2 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. அதில் ஒரு பெட்டி பொதுப்பெட்டி. மற்றொன்று கார்டு பெட்டி ஆகும். இதில் பொதுப்பெட்டி நசுங்கி நொறுங்கியது.
ரெயில் கவிழ்ந்தது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். மேலும் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் லக்னோ மற்றும் ரேபரேலி நகரங்களில் இருந்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல், உறுப்பினர் அஜய் சுக்லா ஆகியோரை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடர்பு கொண்டு மீட்புப்பணிகளை முடுக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார். ரெயில்வே இலாகா ராஜாங்க மந்திரி மனோஜ் சின்கா, ஏ.கே.மிட்டல் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்த கோர விபத்தில் 38 பயணிகள் பலி ஆனார்கள். மேலும் சுமார் 150 பேர் காயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் பலர் பொதுப்பெட்டியில் பயணம் செய்தவர்கள் ஆவார்கள். அடுத்த பெட்டியும் கார்டு பெட்டியாக இல்லாமல் பொதுப்பெட்டியாக இருந்திருந்தால் உயிர்ச்சேதம் மேலும் அதிகமாகி இருக்கும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்புப்படையினர், கவிழ்ந்து கிடந்த ரெயில் பெட்டிகளை மெஷின்கள் மூலம் வெட்டி, பலியானவர்களின் உடல்களை வெளியே எடுத்ததோடு, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மற்றும் பஸ்கள் மூலம் ரேபரேலி, லக்னோ மற்றும் பைராம்பூரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.
இந்த ரெயில் விபத்து மிகுந்த துயரம் அளிப்பதாக கூறி உள்ள உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
மேலும் காயம் அடைந்த பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை. நிலையத்தை நெருங்கும் போது ரெயிலின் பிரேக் வேலை செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக ரெயில் சிக்னலை கடந்து வேகமாக சென்று விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தின் காரணமாக லக்னோ-வாரணாசி மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
www.dailythanthi.com

0 Comments