Ticker

6/recent/ticker-posts

பசில் வியட்னாமில் பதுங்கியுள்ளாராம்

அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பி­யோடி தலை­ம­றை­வா­கி­யுள்ள முன்னாள் பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அங்­கி­ருந்து வியட்­நா­முக்கு தப்பிச் சென்று விட்­ட­தா­கவும் இப்­போது அவர் எங்கு உள்ளார் என எவ­ருக்­குமே தெரி­யா­தி­ருப்­ப­தாகவும் பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வாய் மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லலித் திசா­நா­யக்க எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
முன்­ன­தாக லலித் திஸா­நா­யக்க எம்.பி. தனது கேள்­வியில் இலங்கை மத்­திய வங்­கியின் புதிய ஆளுநர் வெளி­நாட்­ட­வ­ரென்றும் மேற்­சொல்­லப்­பட்ட நப­ருக்கு இலங்­கையில் பிர­ஜா­வு­ரிமை உள்­ளதா என்றும் ஆம் எனில் அவர் இலங்கைப் பிர­ஜா­வு­ரி­மையை பெற்றுக் கொண்ட திகதி எது­வென்றும் மத்­திய வங்­கியின் ஆளுநர் பதவி வகிக்கும் தகுதி அவ­ருக்கு உள்­ளதா என்றும் கேள்­வி­யெ­ழுப்­பினார்.
 இதற்கு பதி­ல­ளித்த பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ர­னுக்கு இலங்கை பிர­ஜா­வு­ரிமை இல்லை. அதைப் பெற்­றுக்­கொள்ள அவர் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றார்.
 மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக பதவி வகிப்­ப­தற்கு இவ­ருக்கு கல்­வி­ய­றிவும் தகு­தியும் உள்­ளது.தற்­போது சிங்­கப்பூர் பிர­ஜை­யா­க­வுள்ள அவர் ஒரு கால கட்­டத்தில் இலங்கை பிர­ஜை­யாக இருந்தார்.
 மத்­திய வங்­கியில் பல காலம் பதவி வகித்தார். தற்­போது இவர் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டு தொடர்பில் நாம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அமெ­ரிக்கப் பிர­ஜை­யான முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் எடுத்த கடன்­களை செலுத்த நாம் பெரும் சிர­மப்­ப­டு­கின்றோம்.
 அது மட்­டு­மல்ல நாட்டு மக்­களின் பணத்­தையும் கொள்­ளை­ய­டித்து விட்டு தற்­போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்­றுள்ளார்.  அவர் இன்று எங்­கி­ருக்­கின்றார் எனத் தேடிக்­கொள்ள முடி­யா­துள்­ளது. அமெ­ரிக்­காவில் இருப்­ப­தாக கூறி­னார்கள். இன்று அங்கும் இல்லையாம். வியட்நாமுக்கு சென்று விட்டாராம். நாம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை. ஆனால் கொள்ளையடித்தவர்களை தப்பிக்க விடமாட்டோம். கொள்ளையடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம்.

Post a Comment

0 Comments