இலங்கை, சீனாவிடம் 5 பில்லியன் டொலர்களை (650 பில்லியன் ரூபாய்) கடனாக பெற்றுள்ளதாகவும் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீன பயணத்தின் போது, சீன அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த கடன்கள் தொடர்பிலான விவரங்களை தமக்கு தெரியபடுத்துமாறு கேட்டுகொண்டமைக்கு அமைய,
இந்த விவரங்களை சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்திச்சேவை இன்று திங்கட்கிழமை(02) செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் நாட்களில் சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடனானது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே வழங்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா ஜயினியிங் கூறியதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments