Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பிரதியமைச்சா் சரண குணவர்தன கைது

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். 90 லட்ச ரூபா இரும்பு கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசிய பொலிஸாரிடம் வாக்கு மூலமொன்றை அளிக்கச் சென்றிருந்த போது சரண கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபத்தைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்மி என்ற வர்த்தகர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக சரணவிற்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி நாடா ஒன்றையும் குறித்த வர்த்தகர் ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.

Post a Comment

0 Comments