Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீ.ல.சு.க மஹிந்தவுக்கு கதவடைப்பு ! தொழிலாளா் கட்சியில் போட்டியிடும் மஹிந்த ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை வகித்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையில்,    இலங்கைத் தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.
ஏ.எஸ்.பி. லியனகே தலைமையில் இலங்கைத் தொழிலாளர் கட்சி செயற்படுகின்றது.    அவரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அறிவிக்கப்படும் என்று ஏ.எஸ்.பி. லியனகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments