Ticker

6/recent/ticker-posts

தமிழரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானங்கள்

இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசாங்கம் தீர்வு காணவேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
 தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா வைரவபுளியங்குளம் லக்சுமி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது. அதன்  பின்னர் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போதே மத்தியக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வாசித்தார். மத்தியக்குழு கூட்டத்தின் போது, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலையின் நிலைமையை தொடர்பில் ஆராயப்பட்டது என்றுஆராய்ந்து, 

 1.    தமிழர்களின் காணிகளை மீள் கையளித்தல்
 2.    அரசியல் கைதிகளை விடுவித்தல் 
3.    காணாமல் போனோர் சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு தேர்தலின் போது, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி உடனடியாக இவை தொடர்பாக நடவடிக்கை எடுக்கமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது
. 4.    போர் சூழலில் இடம்பெயர்ந்த ஒவ்வொருவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றும் வகையில் செயற்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தல். 
5.    இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு தொடர்பில், புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும. 
6.    இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு அங்கிகரித்து ஏற்றுக்கொள்கின்றது எனவும் மத்திய குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Post a Comment

0 Comments