போதைப்பொருள் வர்த்தகர் வெலேசுதாவின் நெருங்கிய கூட்டாளியான, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர் மொஹம்மட் மகீன் மொஹம்மட் சித்தீக் என்பவரை பாகிஸ்தான் உளவுப் பிரிவு கைது செய்துள்ளது.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட சித்திக் இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.
கொழும்பு, மருதானை, மொஹிதீன் மஸ்ஜித் வீதியைச் சோ்ந்த 46 வயதான சித்தீக், பாகிஸ்தான் பெண்ணொருவரை மணம்முடித்து அங்கு தலைமறைவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 Comments