சிகிரியா கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய யுவதிக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியுமா என ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியிடம் தாம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த உதேனி சின்னத்தம்பி என்ற யுவதி, சீகிரியா கண்ணாடிச் சுவரில் கிறுக்கியமைக்காக இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அறியாமை காரணமாக இவ்வாறு கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய யுவதிக்கு இலங்கை அரசியல் சாசனத்தின் 34ம் சரத்தின் அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு அஜித் பெரேரா ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

0 Comments