Ticker

6/recent/ticker-posts

துமிந்த சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவின் ஆலோ­ச­கர்­களில் ஒரு­வ­ராக இருந்த பாரதலக்ஷ்மன் பிரே­ம­ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை படு­கொலை செய்தமை தொடர் பில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா உள்­ளிட்ட 13 பேருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்­ளது.

கொழும்பு மேல் நீதி­மன்றில் நேற்ரு இந்த குற்ரப் பத்­தி­ரி­கை­யினை சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்­தது.

பாரத லக்ஷ்மன் பிரேம சந்­திர, தர்­ஷன ஜய­தி­லக, மொஹம்மட் அஸ்மி, மினிமெல் குமாரசுவாமி ஆகி­யோரை சுட்டுக் கொன்­றமை பார­த­லக்ஷ்மன் பிரே­ம­சந்­தி­ரவின் பாது­காப்பு உத்தியோ­கத்தர் ராஜ­பு­ரகே காமி­னிக்கு கடுங் காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, சட்ட விரோதகோட்டம் கூடி­யமை, கொலை முயற்சி உள்­ளிட்ட 17 குற்றச் சாட்­டுக்­களை சுமத்தியே சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்­வா­வுக்கு மேல­தி­க­மாக அனுர துஷார டீ மெல், சந்­தன ஜகத் குமார, சமிந்த ரவி ஜயநாத்,லன்கா ரசஞ்­சன, மாலக சமீர, விதான கமகே அமில, சரத் பண்­டார, சுரங்க பிரே­மலால், சமன் குமார அபே­சிங்க, ஜானக பண்­டார, ரோஹன மார­சிங்க மற்றும் நாகொட லிய­னா­ரச்­சிகே சமிந்த ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பிட்டே இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

2001-ம் ஆண்டு வல்­பொல, முல்­லே­ரியா என்ற இடத்தில்தேர்தல் காலத்தின் போது பாரத லக்ஷ்மன் பிரேம சந்திரவும் அவருடன் இருந்த மேலும் மூவரும் துப்பாக்கி சமரில் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments