முன்னாள் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீளவும் இணைந்து கொள்வதற்காக எஸ்.பி. திஸாநாயக்க விண்ணப்பம் செய்துள்ளார். எனினும் இந்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணையச் செய்த நபர் ஒருவரின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம ஜேம்ஸ் பாக்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அது தொடர்பிலான சாட்சியங்கள் இருப்பதாக எஸ்.பி. திஸாநாயக்க அண்மையில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

0 Comments