Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றிபெறச் செய்வோம் கூட்டம் கண்டியில்?

மஹிந்தவுடன் இணைந்து நாட்டை வெற்றி பெறச் செய்வோம் என்ற கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினால் இந்த கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி கண்டியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணி,  தேசிய சுதந்திர முன்னணி,  ஜனநாயக இடதுசாரி
முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இவ்வாறு கூட்டாக இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
கண்டியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரின் முதலாம் கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி நுகேகொடையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்சித் தலைமையின் அனுமதியின்றி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வேறும் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாத என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments