தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவ பிரிகேடியர் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சப்புகஸ்கந்த - மாகொல பகுதியில் 2007 நவம்பர் 23ம் திகதி தனது மனைவியை சுட்டுக் கொலை செய்ததாக ஓய்வுபெற்ற பிரிகேடியர் சந்தன பிரியந்த என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கம்பஹா சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி பியசிலி விக்ரமசிங்க மத்துரட்ட இன்றைய வழக்கு விசாரணை நிறைவில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 33 வயது தேஜாங்கனி என்ற பெண் கொல்லப்பட்டார்.
0 Comments