Ticker

6/recent/ticker-posts

மோடியின் இலங்கை பயணம்: ஜவாஹிருல்லாஹ் குற்றச்சாட்டு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் சிறிசேனாவும் ஒன்று சேர்ந்து இனப் படுகொலை குற்றச்சாட்டில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற முயல்வதாக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஜவாஹிருல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளார்.     

ஈழத்தமிழர் இனப்படுகொலை விசாரணைத் தீர்ப்பை ஒத்திவைத்த ஐ.நா. சபையைக் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜவாஹிருல்லாஹ் ஈழத்தில் ராஜபக்ஷ அதிபராக இருந்த காலகட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று குறிப்பிட்டார். 

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கூடிய நாளாக மார்ச் 25ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இதனை தாமதப்படுத்த பலர் முயல்வதாக ஜவாஹிருல்லாஹ் குற்றம் சாட்டினார்.

Post a Comment

0 Comments