Ticker

6/recent/ticker-posts

ரங்கன ஹேரத்திற்கு பதிலாக சீக்குகே பிரசன்ன?

இங்கிலாந்துடனான போட்டியின் போது காயம் ஏற்பட்டதன் காரணமாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திற்கு பதிலாக சீக்குகே பிரசன்வை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

ரங்கன ஹேரத் காயமடைந்துள்ளதன் காரணமாக 7 தொடக்கம் 10 நாட்கள் வரை ஓய்வு பெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முற்னேற்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சீக்குகே பிரசன்ன அவுஸ்ரேலியாவுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரங்கன ஹேரத் விளையாடாததன் காரணமாக  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவுடன் இடம்பெறவுள்ள போட்டியில் சச்சித்ர சேனாநாயக்க சுழற்பந்து வீச்சாளராக களக்கமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments