மத்திய தரைக்கடலில் லிபியாவிற்கு மிக அண்மையில் தத்தளித்த 1000 அகதிகள் பிரித்தானிய போர்கப்பல் HMS Bulwark மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக செல்கின்றார்கள்.
இவ்வாறு சட்டவிரோதமாக பயண செய்யும் அவர்கள், கடலில் சிக்கிகொண்டு தவிக்கின்றனர், இந்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் 4 அகதிகள் படகு சிக்கி தவிப்பதை ஹெலிகொப்டர் மூலமாக பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிந்து கொண்டது.
இதனைத் தொடர்ந்து HMS Bulwark என்ற நவீன போர்க்கப்பல் மூலமாக 1000 பேரும் பத்திரமாக நேற்று மீட்கப்பட்டனர்.
இத்தாலியில் மட்டும் இந்த ஆண்டில் 2 லட்சம் பேர் குடியேறி உள்ளனர்

0 Comments