Ticker

6/recent/ticker-posts

யோகா மனநிறைவைத் தருகிறது : ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன்

யோகா ஒருபோதும் பாகுபாடுகளை ஏற்படுத்துவது இல்லை என்றும், யோகா செய்வதன் மூலம் மனநிறைவு கிடைக்கிறது என்றும், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார்.

முதன் முதலாக, சர்வதேச யோகா தினம் வரும் 21 ஆம் தேதி, உலகமெங்கும் அனுசரிக்கப்பட உள்ளது.

ஒரு புறம் இந்திய மத்திய அரசு, நாடு முழுவதும் தீவிரமாக, யோகா தின ஏற்பாடுகளை செய்து வருகிறது. மற்றொரு புறம், இஸ்லாமிய தலைவர்கள், யோகாவில், சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்யும் நடைமுறை இருப்பதால், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா பொது செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம், டெல்லி வந்திருந்தப் போது முதன் முதலில் யோகா செய்ததாகவும், யோகாசனம் தனக்கு எளிமையான உணர்வையும், மனநிறைவையும் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், யோகா எந்த வித பாகுபாடுகளும் இன்றி,  அனைத்து தரப்பு மக்களும் செய்யக் கூடிய வாழ்வுக்கலை, இது உலகம் முழுவதும் பரவ வேண்டும், என தெரிவித்துள்ளார்.

இந்திய உட்பட 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், பிரதமர் நரேந்திரமோடி முன்வைத்த தீர்மானத்தை, 177 நாடுகள் ஆதரித்து, உலக யோகா தினம் கொண்டாட ஒப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments