Ticker

6/recent/ticker-posts

Facebook இந்தியாவின் நிர்வாக இயக்குநராகும் உமாங் பேடி

முதன்மை சமூக வலைதளமான ஃபேஸ்புக், Facebook இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இந்தியரான உமாங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேஸ்புக் இந்தியா நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.
இதற்கு முன்பு Adobe நிறுவனத்தில் பணிபுரிந்த உமாங், ஜூலை மாதத்திலிருந்து facebook இந்தியா நிர்வாக இயக்கு நராக தனது பணிகளை தொடங்க உள்ளார். இந்தியாவின் முக்கிய வாடிக்கையாளர்கள் மற்றும் மண்டல அளவிலான முகவர் களிடம் நிறுவனத்தின் உத்திகள் சார்ந்த உறவுகளை உருவாக்குவது மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு இந்த பொறுப்பில் இருந்த கிருத்திகா ரெட்டி, அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலத்தில் புதிய பதவி வகிக்க இருக்கிறார்.

உமாங் பேடி இருபது ஆண்டுகளுக்கு மேலாக விற்பனை, சந்தை மற்றும் கூட்டு தொழில்களில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் நாடுகளின் துணைத் தலைவர் டான் நெரி, உமாங் பேடியின் திறமைக்கு இந்தியா சரியான களமாக இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். சுமார் 15 கோடி பேர் இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உமாங் புனே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும், Harvard நிர்வாகவியல் பள்ளியில் உயர்கல்வியும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments