சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 140க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் இதுவரை உயிரிழப்பு 3199 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.036 ஆக அதிகரித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு வெளியே ஈரான், இத்தாலி நாடுகள் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments