இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து வரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முதற்தர முஸ்லிம் வேட்பாளரான முஜிபுர் ரஹ்மான் இலங்கை முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நே்றறு (22) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். அதன்போது உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக், உபதலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் ஆகியோர் ஜம்இய்யதுல் உலமா சார்பாகவும் முஜிபுர் றஹ்மானுடன் அவரது சட்ட ஆலோசகர் சட்டத்தரணி மர்சூக், முஜிபுர் றஹ்மானின் தேர்தல் பிரசார பணிப்பாளர் அஷ்ஷெய்க் மிப்லால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது இலங்கை முஸ்லிம்களின் சமகால கல்வி, அரசியல், மார்க்கம், கலாச்சாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டதோடு அவைகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் உலாமாக்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. அதன்போது அவ்வாறான சவால்களை எதிர்கெள்ள முஜிபுர் றஹ்மான் போன்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று கூறிய உலமாசபை தலைவர்கள் அவருக்காக தமது துஆக்களும் ஆலோசனைகளும் என்றென்றும் உண்டென்றும் தெரிவித்தனர். அதன் பிறகு முஜிபுர் றஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்திற்காக தான் செய்துவரும் போராட்டம் நாடாளுமன்ற அரசியலுடன் முடிவடையாது என்று வாக்குறுதி அளித்தார்.
ஞானசார போன்ற இனவாதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுமிடத்து அவ்வாறானோரை எதிர்கொள்ள முஜிபுர் றஹ்மான் போன்றவர்களை கட்டாயம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சட்டத்தரணி மர்சூக் தெரிவித்தார். அதனை முஜிபுர் றஹ்மானுடன் வருகை தந்த அவரின் தேர்தல் பிரசார பணிப்பாளர் மௌலவி மிப்லால் உட்பட உலமா சபை தலைமைகள் ஆமோதித்தனர்.
இறுதியாக உலமா சபையினரின் துஆப் பிரார்த்தனையுடன் சந்திப்பு நிறைவுற்றது. எதிர்வரும் நாட்களில் இலங்கை இஸ்லாமிய அமைப்புகளையும் முஜிபுர் றஹ்மான் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
எமது நாட்டில் முஸ்லிம் தலைமைகள் என அடையாளம் காணப்படும் சிலர் ஆசீர்வாதம் பெறவும் தமதுசுய ஆதங்கங்களை வெளிப்படுத்தவும் கண்டி பௌத்த தலைமைகளை நாடும் இச்சந்தர்ப்பத்தில் முஜிபுர் றஹ்மானின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கதும் முன்மாதிரியானதுமாகும்.
கொழும்பில் இருந்து கலீலுர் றஹ்மான்
கொழும்பில் இருந்து கலீலுர் றஹ்மான்
0 Comments