Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய பிழை செய்துவிட்டார் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை எற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்படுவதனை தாம் எதிர்த்ததாக ஜனாதிபதி கூறியிருந்தார்.எனினும், ஜனாதிபதியின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வளவு விடயங்களையும் முடிந்ததன் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கப்படுவதனை தாம் எதிர்த்ததாக மைத்திரிபால சிறிசேன கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய பிழை ஒன்றை செய்து விட்டதாகவும் அதனை திருத்திக் கொள்ள காலம் கடந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் மூன்று சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களில் மூன்றாம் சந்திப்பு இரகசியமாக நடத்தப்பட்டதாகவும் இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால இதுவரையில் வாய் திறக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கம்பஹா மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தனவிற்கு வேட்பு மனு வழங்காது அவரது மனைவிக்கு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments