Ticker

6/recent/ticker-posts

எயார் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 109 பயணிகள்

எயார் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், புறப்பட்ட‌ அரை மணி நேரத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஐதரபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 3.50 மணிக்கு விஜயவாடா கன்னாவரம் விமான நிலையத்துக்கு 109 பயணிகளுடன் எயார் இந்தியா விமானம் புறப்பட்டது.
இந்நிலையில் புறப்பட்ட அரைமணி நேரத்தில் விமானத்தில் உள்ள ஏசி பழுதாகி் விட்டதால், பயணிகள் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனை கவனித்த விமானி, உடனடியாக விமான தளத்துக்கு தகவல் கொடுத்து, மீண்டும் விமானத்தை தரையிறக்கினார்.

இதன் காரணமாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உயர் அதிகாரிகள் உட்பட 109 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதன்பின்னர் மாற்று விமானத்தில் இவர்கள் அனைவரும் விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய‌ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments