Ticker

6/recent/ticker-posts

போதைப் பொருளுக்கெதிரான போராட்டத்திற்கு சங்காவிற்கு அழைப்பு!

இம்மாத இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துஓய்வுபெறும் குமார் சங்கக் காரவை போதைப் பொருளுக்கெதிரான போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபை இந்த அழைப்பை விடுக்கவுள்ளது.
இதேவேளை, தனக்கு அரசியலுக்கு வருமாறு அழைப்பு வரவில்லை என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து குமார் சங்கக்கார ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.
''இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். இதுவரை எனக்கு அரசியலுக்கு வருமாறு அழைப்பு வரவில்லை. அது தொடர்பில் எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் நான் இதுவரை அதுபற்றி எண்ணவில்லை.'' எனத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments