Ticker

6/recent/ticker-posts

12வருடங்களுக்கு முன் 10 பேச்சஸ் காணியில்லாத றிஷாத் இப்போது பெரும் பணக்காரர் - ஊடக சந்திப்பில் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹா்ஷா

(அஸ்ரப் ஏ சமத்)

இன்று கொழும்பு ரேனுகா கோட்டலில் குருநாகல் மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினா் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹா்ஷா   மற்றும் மன்னாரைச் சோ்ந்த குவைா்தீன்கான் ஆகியோா் அமைச்சா் றிசாத் பதியுத்தீனின்  சொத்துக்கள்  சேகரிப்பு பற்றிய ஊடகவியலாளா் மாநாட்டில் கலந்து கொண்டனா்.

இடைநடுவில் மேல்மாகாணசபை உறுப்பினா் முஹமமட் பாயிஸ் வருகை தந்ததால் -ஊடக மாநாட்டில் வாக்குவாதம் இடம்பெற்றது. றிஸ்வி ஜவஹா்ஷா வுக்கு சாா்பாக மேல்மாகாண சபை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினா் அர்சாத் நிசாம்தீன் மற்றும் அவரது ஆட்களும் பாயிஸுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டு பாயிசை வெளியேற்றினா்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த றிஸ்வி ஜவஹா்ஷா  

முஸ்லீம் காங்கிரஸின் மறைந்த முன்னாள்  அமைச்சா் நூா்தீன் மசூா்  ஊடாகவே றிஸாத் அரசியலுக்கு வந்து  பாராளுமன்ற உறுப்பினரானாா். உறுப்பினராகி   2 மாதத்திற்குள் இவரும்  அமீா் அலியும் கட்சியில் இருந்து மாறி அமைச்சாரானாா்கள்.

12வருடங்களுக்கு  முன் றிஷாத்,  பாராளுமன்ற்த்தில் அவருக்குரிய சொத்துப் பிரகடனத்தில் தனக்கு ஓர்  மோட்டாா் பைசிக்களோ 10  போ்ச்சஸ் காணியோ  இந்த நாட்டில் இல்லை என பிரகடனப்படுத்தியுள்ளாா்.   ஆனால் அவருக்கு தற்பொழுது -

உறவினா்கள்  பெயரிலும், மனைவி, சகோதரா்கள் மற்றும் நண்பா்கள் பெயாில் உள்ள கொத்துக்கள் ,  கம்பனிகள் பங்குகள், கொழும்பில் தெஹிவளை, ராஜகிரிய வீடுகள் பற்றிய முகவரிகளும் அது சம்பந்தமான உறுதிப்பத்திரங்களும் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டன.
 புத்தளம் மன்னாா் மாவட்டத்தில் அவரது உறவினா்களுக்கு  3000 ஏக்கா் காணிகள் பற்றிய பதிவுகள் 71 கோவைகளைக் காட்டினாா்கள்.

அத்துடன் வடக்கில் கொங்கிறீட் பாதைகள், குளங்கள்  நிர்மாணங்கள் தனது சகோதரியின் பெயரில் உள்ள மெஹா சிட்டி நிர்மாணக்கம்பணிகள் ஊடாக கடந்த 10 வருடங்களாக வடக்கில் நிர்மாண ஒப்பந்தங்கள் பற்றியும்  தெரிவிக்கப்பட்டன. 

கட்டாா் நாட்டில் ஆர் ஆர். ஏ  என்ற நிறுவனத்துடன் வீடுகள் நிர்மாணிக்க பெற்ற, அரபு பத்திரிகைகளில் வந்த செய்திகள் புகைப்படங்கள் மற்றும் மன்னாா் பள்ளிவசாலுக்கு கையளிக்கப்பட்ட நிதிகள் பற்றியும் படங்களுடன் அந்த நாட்டின் நிறுவனத்தின் வெப்பதளங்கள் செய்திகள் படங்களையும் காண்பித்தனா்.

மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஸ்ரப் அவா்கள் தனது மகன் அமான் அஸ்ரப் அன்று 25ஆ யிரம் ரூபாவு சம்பளத்துக்கு வேலைசெய்தாா். இன்றும் அவா் அவ்வாறு ஒரு கம்பனியில்தான் சாதாரணமாக தொழில் செய்கின்றாாா்.  அவர் ஒருபோதும் தனது குடும்பத்துக்கு  சொத்து சோத்து வைக்கவில்லை இது தான் முஸ்லீம் காங்கிரஸ் தலைமைகள் கற்றுத்தந்த பாடம் .
ஆனால் றிசாத் பதியுத்தீன் போன்றோா் தனிக் கட்சி நடத்தி அதன் ஊடாக பணம் வீசுகின்றனா். இவா்கள் இந்தக் கட்சியில் ஊடாக அரசியல் முத்திரை பதித்தவா்கள்.  


இங்கு உரையாற்றிய குவைதீா்கான்,  நான் றிஷாதை மிரட்டி 4 கோடி ரூபா பணம் கேட்டதாக றிஷாத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளாா். அதற்கு ஆதாரமாக வெறும் சீ.டி  ஒன்றைக் காட்டியுள்ளாா். என்னை இவ்வாறு செயற்பட  வேண்டாம் என்று அவா்தான் என்னை அவரது ஆட்கள் ஊடாக மிரட்டினாா். பணம் தருவாதக சொன்னாா்.  இவா் பற்றிய ஏனைய சொத்துக்கள் விபரம் மேலும் கொழும்பில் உள்ளது அதனையும் பெற்றுள்ளோம் ஏற்கனவே பொலிஸ் எப்சிஐடி பிாிவு மற்றும் , லஞ்ச  சொத்துசேகரிப்பு ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம். இவா் கட்டாா், பாக்கிஸ்தான், துருக்கி, பஹ்ரை போன்ற நாடுகளில் இவ்வாறு இடம் பெயா்ந்த மக்களை காட்டி நிறைய வெளிநாட்டு நிதி சேகரித்தாா். ஆனால் ்அந்த மக்கள் இன்னமும் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். இ ம் மக்களைக் காட்டி அவா் குடும்பத்திற்கு சொத்து சேகரி்ததுள்ளாா் எனத் தெரிவித்தாா்

Post a Comment

0 Comments