திருட்டுத்தனமாக பெற்றுக்கொண்ட அதிகாரம் எதிர்வரும் 17ம் திகதியுடன் நிறைவடைகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதம் மற்றும் திருட்டுத்தனமாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த ஆட்சி நாளையுடன் முடிவடைகின்றது.
அனைத்து விதமான கருத்துக் கணிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 117க்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும்.
நல்லாட்சி அரசாங்கம் ஈழமொன்றை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன், மத்திய வங்கி பிணை முறியின் ஊடாக வரலாறு காணாத ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக இ;ப்போதே அரசாங்கம் பாரியளவில் பணத்தை மோசடி செய்துள்ளது.
1977ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் ஊழல் மோசடிகள், களவு, போதைப் பொருள் உள்ளிட்ட அனைத்து தீய விடயங்கயையும் அறிமுகம் செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிங்களப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
tamilwin.com

0 Comments