Ticker

6/recent/ticker-posts

முஜீபுர் றஹ்மானுக்கு எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முஜீபுர் றஹ்மானுக்கு எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது புதுக்கடையில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. கொழும்பில்  போட்டியிட வேட்பு மனு வழங்கப்படாத ஒருவரின் பொய்க் குற்றச்சாட்டினால் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக அறிய வருகிறது. குறித்த அரசியல்வாதி முஜீபுர் றஹ்மானை தோல்வியடைய செய்ய கடும் முயற்சி செய்தும் தனது காரியம் கைக்கூடாததால் முஜீபுர் றஹ்மான் மீது சேறு பூசும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் முஜீபுர் றஹ்மான் தரப்பில் கூறப்படுகிறது.

பொலிஸாரின் கடுமையான இடையூறுகளுக்கு மத்தியில் முஜீபுர் றஹ்மானின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரின் பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்கு பொலிஸ் அவசர பிரிவிற்கு அடிக்கடி தொலை பேசி அழைப்புகள் வழங்கி பிரசாரப்பணிகள் இடைநிறுத்தவும் பட்டதாகவும் அறிய வருகிறது. இந்த பின்னணியில்தான்

தேர்தல் சட்டங்களை மீறியதாக முஜீபுர் றஹ்மானுக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 24ம் திகதி முஜீபுர் றஹ்மானை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments