தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
மிகப் பிரபலமானதும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருவதுமான எரவான் புனிதத்தலத்திற்கு அருகாமையில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும் ஒரு குண்டு, வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டு மோட்டார் சைக்கிள் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக சிலரும் மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்ததாக சிலரும் தெரிவித்துள்ளனர்.




0 Comments