ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 25 பேரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர்களாக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதமர்களான டி.எம்.ஜெயரட்ன, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மற்றும் ஜோன் செனிவிரத்ன, சுசில் பிரேமஜெயந்த ஆகியோரும் சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர்.
இவர்களுக்குப் பதிலாக, புதிதாக 25 பேரை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாக நியமிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களில் சுதந்திரக் கட்சியின் புதிய பதில் செயலாளர் துமிந்த திசநாயக்க கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments