சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டியான்ஜின் நகர துறைமுக சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 44 பேர் பலியாகினர்.இங்குள்ள எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை அடுக்கி வைத்திருந்த சேமிப்பு கிடங்கில் (வேர் ஹவுஸ்) உள்ளூர் நேரப்படி நேற்று பின்னிரவு ஏற்பட்ட சிறிய தீவிபத்தையடுத்து, சுமார் 11.30 மணியளவில் அடுத்தடுத்து மர்மப் பொருட்கள் வெடித்துச் சிதறின.
இதைத் தொடர்ந்து வெகு தூரம்வரை சிதறி விழுந்த தீக்கோளங்களால் அருகாமையில் உள்ள சில நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
இதனால், அந்த துறைமுகப் பகுதி முழுவதும் பெருந்தீ மற்றும் புகை
மூட்டத்தால் சூழப்பட்டது. பற்றி எரியத் தொடங்கிய கட்டிடங்களில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிகளும் சலவைக்கற்களும் வெப்பம் தாங்காமல் பல மீட்டர் தூரத்துக்கு வெடித்துச் சிதறின.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுமார் 50 தீயணைப்பு வாகனங்களுடன், நூற்றுக்கணக்கான மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விடிய, விடிய தீயை அணைக்க முயன்றும், காட்டுத்தீ போல பரவி வரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவர்கள் போராடி வருகின்றனர்.

இன்று அதிகாலை நிலவரப்படி, இவ்விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த சுமார் 20 பேர் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 300 பேர் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், இந்த செய்தி வெளியான ஓரிரு மணிநேரத்துக்குள் சிகிச்சை பலனின்றி மேலும் 24 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.
சிகிச்சை பெற்றுவரும் சுமார் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு சீனாவில் தலைநகர் பீஜிங்கின் அருகில் அமைந்துள்ள டியான்ஜின் துறைமுகமும், அதையொட்டியுள்ள தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளும் அப்பகுதியின் பொருளாதார வளத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகின்றன. இந்த வருமானத்தை நம்பி சுமார் 75 லட்சம் மக்கள் டியான்ஜின் நகரில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments