Ticker

6/recent/ticker-posts

ராஜித சேனாரத்னவின் ஆதரவாளர் கைது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உருவப்படம் மற்றும் விருப்பு இலக்கம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகளுடன் அவரின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து, அமைச்சரின் பெயரும் உருவமும் பொறிக்கப்பட்ட தண்ணீர் போத்தல்கள், 500க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், 440 கையேடுகள், 40 கட் அவுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்படி பொருட்களை எடுத்துச் சென்ற வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையில் வைத்து வாகனத்துடன் கைது செய்யப்பட்ட இவர், ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments