Ticker

6/recent/ticker-posts

லிபியா கடற்பகுதியில், அகதிகள் சென்ற கப்பலில் இருந்து 51 சடலங்கள் மீட்கப்பட்டது

லிபியாவில் கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து 51 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
லிபியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டுப்போர் காரணமாக அந்த நாட்டைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகிறார்கள். கடல்மார்க்கமாக செல்லும் அவர்கள், பழுதடைந்த படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வதால் அடிக்கடி நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கி விடுகிறார்கள். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.


இவ்வாறு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா மற்றும் இத்தாலி கடற்பகுதியில் 2,400-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றதாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இத்தாலி கடற்படையினர் பிடித்துள்ளனர். இந்நிலையில் லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து 51 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான பயணத்தின்போது இவர்கள் மூச்சு திணறல் காரணமாக பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

சுவீடன் நாட்டை சேர்ந்த போசிடன் கப்பலானது கடற்பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தபோது, நடுகடலில் சிக்கித்தவித்த 130 பேரை உயிருடன் மீட்டனர். இதற்கிடையே அப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த மரக்கப்பலில் இருந்து உதவிகேட்டு குரல் எழுப்பட்டு உள்ளது. இதனையடுத்து கப்பலானது அப்பகுதிக்கு சென்று உள்ளது. கப்பலில் இருந்து 439 பேரை மீட்டு உள்ளது. இதனையடுத்து கப்பலின் மையப்பகுதியில் இருந்த அறையில் சிக்கித்தவித்தவர்களை மரக்கட்டைகளை உடைத்து மீட்க முயற்சி செய்யப்பட்டது. அறைக்கு 51 பேர் சடலமாக காணப்பட்டு உள்ளனர். அவர்களது சடலும் மீட்கப்பட்டது. 

கப்பலில் அறையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தனர் என்று தெரியவந்து உள்ளது. இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், அகதிகள் தொடர்ந்து பெருமளவு பணம் கொடுத்து இந்த ஆபத்து நிறைந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். பயணத்திற்கு உதவாத கப்பல்கள் அகதிகள் பயணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது

Post a Comment

0 Comments