லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதனால் மேலுதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை பூர்த்தியாகி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னரே, கைது செய்யப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்கள் தொடர்பில் இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இராணுவ உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டமைக்கு பாதுகாப்புச் செயலாளரும், இராணுவத் தளபதியும் எதிர்ப்பை வெளியிட்டதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments