Ticker

6/recent/ticker-posts

54 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறப்பு: புதிய அத்தியாயம் தொடக்கம் !

வாஷிங்டன்: கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே இருந்து வந்த 54 ஆண்டுகால பகை முடிவுக்கு வந்தது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கும், கம்யூனிச நாடான கியூபாவுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் இருந்து வந்தது. கடந்த 1961ம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது உறவை துண்டித்து கொண்டன. கியூபாவை அபாயகரமான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா வைத்திருந்தது. முக்கிய மாநாடுகள், விழாக்களில் பங்கேற்கும்போது இரு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பேசுவதை கூட தவிர்த்து வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் பனாமாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ ஆகியோர் கைகுலுக்கி கொண்டனர். இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், இரு நாடுகளும் உறவை புதுப்பித்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டன. அதற்கான பலனும் கிடைத்தது. கியூபாவை அபாயகரமான நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியது அமெரிக்கா. இருநாடுகள் இடையே உறவை பலப்படுத்தும் வகையில், வர்த்தகம், முதலீடு, போக்குவரத்து உள்ளிட்டவற்றில் ஒப்பந்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அந்தந்த நாடுகளின் தூதரகங்களை திறக்க திட்டமிட்டனர். கடந்த மாதம் அமெரிக்காவில் கியூபா தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிலையில், கியூபா தலைநகர் ஹவானாவில் நேற்று அமெரிக்க தூதகரம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கலந்து கொண்டார்.

1945ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கியூபா சென்றது இதுவே முதன்முறை. இருநாடுகளுக்கு இடையேயான பழைய பகைகள் மறக்கப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என ஜான் கெர்ரி தெரிவித்தார். 54 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் அமெரிக்கா தூதரகம் திறக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments