இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்து மஹா சபையினர் சார்பில் கோவை, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்துக்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா. எனவே, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேரை பொலீஸார் கைது செய்தனர்.

0 Comments