Ticker

6/recent/ticker-posts

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து சுசில் பிரேம்ஜயந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஆகியனவற்றின் அனுமதியின்றி பதவிகளிலிருந்து நீக்க முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் கட்சியின் உறுப்புரிமை அல்லது கட்சியின் ஓர் பதவி குறித்து மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரது உறுப்புரிமையை ரத்து செய்ய அல்லது இடைநிறுத்த கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுவின் அனுமதி தேவையெனக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத் தடை காரணமாக ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்ட முடியாத நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து முறையே சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும் எதிர்வரும் 28ம் திகதி வரையில் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments