பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டிய விடையம் என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்பவர்கள் அச்சம் காரணமகா விசாரனைகளிலிருந்து விலகி நிற்பது மிகப் பெரிய தவறு எனவும் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சி பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல் விசாரணைகள் அரசியல் கட்சிகளின் தேவையாக நோக்கப்பட கூடாது எனவும் அது நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாஜுதீனின் கொலை விசாரணை குற்றவியல் தொடர்பில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் என ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சி பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Comments