காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை நடத்தி வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாட்டை விட்டு செல்வதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று தளர்த்தப்பட்டது.
அதன்படி, அவர் வெளிநாடு சென்று வர முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் இத் தடையைத் தளர்த்துவதாக காலி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் திருமதி நிலுபுலி லங்காபுர அறிவித்தார்.
மேற்படி ஆயுத களஞ்சிய குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட்ட மூவரின் தடை இவ்வாறு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதிவாதிகளான இம்மூவரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஆராய்ந்ததன் பிறகே குறித்த தடையை ஒரு மாத காலத்துக்கு நீக்குவதாக நீதிவான் அறிவித்தார்.

0 Comments