Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால் பார்த்துக்கொள்வோம்!- பிரசன்ன ரணதுங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியை வழங்காவிட்டால் அதனை அப்போது பார்த்துக் கொள்வோம் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணைக்கு தலை வணங்காத தலைவர்களுக்கு எதிர்காலம் இருக்காது.

எனவே மஹிந்தவிற்கு மைத்திரி பிரதமர் பதவியை வழங்காவிட்டால் அப்போது அதனைப் பார்த்துக் கொள்வோம்.
ஏனெனில் மக்கள் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.
கம்பஹாவில் மஹிந்த மைத்திரி தரப்பிற்கு இடையில் முரண்பாடுகள் கிடையாது. எனினும், மக்கள் மஹிந்தவுடன் இருக்க தீர்மானித்துள்ளனர்.
மஹிந்தவிற்காக குரல் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க கம்பஹா மக்கள் தீர்மானித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானிப்பார்கள்.
மஹிந்தவே இந்த நாட்டை மீட்டெடுத்தார், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்.
இதன் காரணமாகவே நாம் மஹிந்த தேவை எனக் கோருகின்றோம். மஹிந்தவும் மைத்திரியும் இணைந்து நாட்டை முன்நோக்கி நகர்த்துவார்கள் அதனை எவராலும் தடுக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எவ்வித பொய் வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

tamilwin.com

Post a Comment

0 Comments