Ticker

6/recent/ticker-posts

சிறு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேசிய விவசாய விநியோக அதிகார சபை - ரணில்

சிறு விவசாய உற்பத்தியாளர்கள் ஊக்குவிப்பதற்கு தேசிய விவசாய விநியோக அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவனல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

100 நாட்களில் நல்லாட்சியை உருவாக்கக் கூடிய தகுதியை கொண்ட எங்களுக்கு 60 மாதங்களில் சிறந்த நாட்டை உருவாக்க முடியும்.

எமது செயற்திட்டங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தவே அதிக
முக்கியத்துவம் அளிக்கின்றோம்.

ஏற்றுமதிக்கான புதிய உற்பத்திப் பொருட்களை பயிரிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுநாயக்கவுக்கு உற்பத்திப் பொருட்களை மிக விரைவாக செல்வதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments