“இரட்டைக் குடியுரிமை என்பது எனது தனிப்பட்ட விடயம். தனிப்பட்ட நபர்களின் உரிமைகளை அமெரிக்காவால் தடுக்க முடியாது.” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இரட்டைக் குடியுரிமையை என்னால் தொடர்ந்து வைத்திருக்க முடியும் அல்லது கைவிடமுடியும். இது எனது தனிப்பட்ட விடயம். இதன் காரணமாக நான் இரட்டைக் குடியுரிமையை தொடர்ந்தும் வைத்திருக்கலாம் அல்லது கைவிடலாம், இதனை எவரும் ஒரு விடயமாக்ககூடாது. எந்த நபரையும் கட்டிவைக்க முடியாது, அமெரிக்கா தன்னை தாரளவாத ஜனநாயகத்தின் தந்தையென அழைக்கின்றது. இதன் காரணமாக அவர்களால் தனிப்பட்ட உரிமைகளிற்கு தடை விதிக்க முடியாது.” என்றுள்ளார்.
அத்தோடு, “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயார் என எப்போதோ தெரிவித்துவிட்டேன்.” என்றும் கோத்தாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments