ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் குருணாகல் மாவட்ட வேட்பாளராக போ்ட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோ்தல் சட்டங்களை மீறி செயற்பட்டு வருவதாக அறிய வருகிறது.
தோ்தல் பிரசாரங்கள் 14ம் திகதி முடிவடைந்த நிலையில், 15ம் திகதி மாலை குருணாகலை பகுதியில் பல பௌத்த விகாரைகளுக்குச் சென்று “சில்” அனுஷ்டிக்க பயன்படுத்தப்படும் வெள்ளைத் துணிகளை தனது வேட்பாளா் இலக்கத்தோடு விநியோகித்திருப்பதாக தோ்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை குருணாகலை பௌத்தாலோக விகாரைக்கு 12 வாகனங்களில் கட்சியின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட வாகனங்களில் விஜயம் செய்த ராஜபக்ஷ வெள்ளை சில் துணிகளை விநியோகித்திருக்கிறாா்.
வாாியபொல தெமடலுவ, திக்வெஹர, வேதண்ட, கொலம்பகம மற்றும் ரண்தென்ட விகாரைக்கும் சென்று மக்களை சந்தித்து உள்ளதாகவும் கபே அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

0 Comments