எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட வேட்பாளா்கள் முஜீபுா் றஹ்மான் மற்றும் பெரோஸா முஸம்மில் ஆகியோரை ஆதாித்து ஐக்கிய தேசிய கட்சியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை கொழும்பு மருதானையில் இடம்பெற்ற போதே, அங்கு உரையாற்றிய சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்த அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் அதேவேளை, முஸ்லிம் மக்களினதும், மலையக மக்களினதும் பிரச்சனைகளுக்கும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் தீர்வு பெற்றுத்தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் சர்வதேச பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா மற்றும் மலைகத்தில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு இலங்கை மாணவர்களும் சர்வதேசம் ரீதியான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் எனவும் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.

0 Comments