Ticker

6/recent/ticker-posts

பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் முன்னாள் சட்டமா அதிபரிடமும் விசாரணை?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிடமும் விசாரணை நடத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அமர்வொன்றில் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இவ்வாறான பொய்யான தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பொய்யான தகவலை முன்னாள் சட்டமா அதிபர் வேண்டுமென்றே பொய்யாக வெளியிட்டாரா? அல்லது தவறான வழிநடத்தல் காரணமாக அவர் இத்தகவலை வெளியிட்டாரா என்பது குறித்து அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவரிடம் விசாரணை நடத்த பொலிசார் தீர்மானித்துள்ளனர்.

அரசியல் தேவைகளின் நிமித்த பொய்யான தகவல் ஒன்றை மொஹான் பீரிஸ் வெளியிட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் பொலிசார் தீர்மானித்துள்ளளனர் என்று தெரிய வருகின்றது.

tamilwin.com

Post a Comment

0 Comments